மசோதாக்கள் மீதான காலக்கெடு தொடர்பான குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு 4 வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் விளக்கம் கோரிய வழக்கில், 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இயற்றிய 10 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் செய்தது, சில மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியது ஆகியவற்றுக்கு எதிரான வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா? என்பன உள்ளிட்ட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி தெளிவுரை கேட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்கப்படும் என்று நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 21 ஆம் தேதிதான் நீதிபதி பி.ஆர். கவாயின் இறுதிப் பணிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் இருக்க மாட்டாரா? அமித் ஷா சூசகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.