எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள் படம் - ஏஎன்ஐ
இந்தியா

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

செனாப் நதியில் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் விளக்குகளை ஏற்றியும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள நிலையில் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியிலேயே தீபாவளியைக் கொண்டாடினர்.

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள வேலியில் தீபங்களை ஏற்றி அண்டை நாட்டுடன் தீப ஒளியைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க | ஆமிர் கான், அக்‌ஷய் குமார் வாங்கிய காரை பரிசளித்துக்கொண்ட யூடியூபர்!

Jammu and Kashmir: Indian Army soldiers posted along the Line of Control

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT