குடியரசுத் தலைவர், துணைத் தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி!
குடியரசுத் தலைவர், துணைத் தலைவருக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!
குடியரசுத் தலைவரையும் குடியரசுத் துணைத் தலைவரையும் நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை முதலில் சந்தித்த பிரதமர், அதனைத்தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர். சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். இந்தப் படங்களை அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2014முதல் தீபாவளித் திருநாளை முப்படைகளுடன் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ள பிரதமர் மோடி இம்முறை இந்திய கடற்படையின் ஐஎன்எ விக்ராந்த் போர்க்கப்பலில் கொண்டாடினார். கோவா கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள உள்நாட்டில் தயரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எ விக்ராந்த் போர்க்கப்பலை ஞாயிற்றுக்கிழமை(அக். 19) மாலை சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று(அக். 20) காலை வரை அங்கிருந்து வீரர், வீராங்கனைகளுடன் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடினார்.
PM Modi calls on President Murmu, shares Diwali greetings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.