டிஜிட்டல் கைது மோசடி Center-Center-Kochi
இந்தியா

14 நாள்கள் டிஜிட்டல் கைது! மோசடி செய்த தொகை ரூ.1.62 கோடி!!

ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்து 14 நாள்கள் டிஜிட்டல் கைதில் வைத்து மோசடி

இணையதளச் செய்திப் பிரிவு

டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரை 14 நாள்கள் வீட்டிலேயே சிறை வைத்து, அவரிடமிருந்து ரூ.1.62 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்த சைபர் குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம், மும்பையில் நடந்த சோதனை ஒன்றில், உங்களுக்குத் தொடர்புடைய சில ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும், டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ரமேஷ் என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், டிஜிட்டல் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 14 நாள்கள் அவரை டிஜிட்டல் முறையில் மோசடியாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

மும்பை சைபர் குற்றப் பிரிவுத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, விடியோ அழைப்பில் பேசிய மோசடியாளர் காவல்துறை சீருடையில் இருந்ததால் ரமேஷ் ஏமாந்திருக்கிறார்.

ரமேஷ் மீது, ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் முதலீடுகள் என அனைத்துத் தகவலையும் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் காவல்துறை என நம்பி அனைத்துத் தகவலையும் கொடுத்திருக்கிறார். இவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யப் போவதாகவும் செல்போனுக்கு ஓடிபி வரும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.62 கோடியை மோசடியாளர்கள் பணப்பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். பணப் பரிமாற்றம் முடிந்த பிறகு மோசடியாளர்கள், ரமேஷை தொடர்பு கொள்ளாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ரமேஷ். விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 அடி பாய்ந்த குட்டி... மகனால் பெருமையடைந்த விக்ரம்!

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? தேஜஸ்வி படம் மட்டும்! வறுத்தெடுக்கும் பாஜக

முதல்முறையாக அடுத்தடுத்து டக்-அவுட்!! ஓய்வு பெறுகிறாரா? கோலி செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொடர் மழை! ஏற்காடு மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

SCROLL FOR NEXT