ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் மற்ற கட்சி வேட்பாளர்களை பாஜக விலைக்கு வாங்குவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலின்போது மற்ற கட்சி வேட்பாளர்களை அமித் ஷா சந்திப்பது ஏன்? என்றும் பேரம் பேசிவிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
''கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 - 12 இடங்களில் இழுபறி நீடித்து வந்தது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களுக்கு சாதகமாக வெற்றியை அறிவித்துவிட்டது. சசி சேகர் சின்ஹா எப்போது பாஜகவில் இருந்தார் என்பதை அவர்கள் (பாஜக) சொல்ல வேண்டும். அவர் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தும் பாஜகவில் இருந்தும் பல தலைவர்கள் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்தனர். அவர் பாஜகவின் ஒழுக்கமான நிர்வாகியாக இருந்தால், ஜன் சுராஜில் சேர்ந்தது ஏன்? ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததும் அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தது ஏன்? பின்னர் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோன்று வேட்புமனுத்தாக்கல் அன்று முதுர் ஷாவை பாஜகவினர் சந்தித்தது ஏன்?
எங்கள் கட்சியின் பல வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுவரை இவ்வாறு 3 பேருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, வேட்புமனுவை திரும்பப் பெற வைத்துள்ளது பாஜக.
வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு ஒழுங்கு நடவடிக்கை உள்ளது. ஆனால், வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் அமித் ஷாவும், பிகார் தேர்தல் பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதானும் எங்கள் வேட்பாளர்களுக்கு இதைத்தான் செய்கின்றனர். உள்துறை அமைச்சர் தங்கள் தலைவர்களுடன் சூழும்போது ஒரு வேட்பாளரால் என்ன செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.