சுற்றுலாப் பயணிகள் (கோப்புப் படம்) 
இந்தியா

பனிப்போர்வை போர்த்தி காட்சிதரும் ஹிமாசல்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் ஹிமாசலப் பிரதேசத்தில் நேற்றிரவு முதல் கடுமையாக பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, மலைப்பகுதிகளில் வெள்ளை பனிப்போர்வையால் மூடப்பட்டிருப்பதுபோல் காட்சியளிக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்வடைய செய்துள்ளது.

அடல் சுரங்கப்பாதை ரோஹ்தாங்கின் பகுதிகளிலும், லஹௌல் மற்றும் பாங்கி பள்ளத்தாக்குகளையும் பனியால் மூடப்பட்டுள்ளது. குலுவில் அதிக மழை பெய்து வருவதோடு, லஹௌலில் பருவத்தின் இரண்டாவது பனிப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.

அதிக பனிப்பொழிவால் நெடுஞ்சாலை 505 (கோக்சர்-லோசர்) நெடுஞ்சாலை 3 (கோக்சர் - ரோஹ்தாங்) மற்றும் சம்பா உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பா மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்ததாகவும், பாங்கியில் உள்ள சாஸ்க் படோரி, சுரல் படோரி மற்றும் பார்மௌரின் காளி சௌ உள்ளிட்ட உயரமான சிகரங்களில் 7.6 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை மற்றும் பனிப்பொழிவு இப்பகுதி முழுவதும் குளிர் அலை வீசி வருகிறது.

பெரும்பாலான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள், வெள்ளை பனித்துகள்களால் மூடப்பட்டு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. மிக மிக குளுமையான காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tourists are overjoyed after heavy snowfall in Himachal Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

ஜோ ரூட் அரைசதம்; இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

SCROLL FOR NEXT