மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யாதவ் கூறியதாவது,
இந்த தேர்தல் அறிக்கை எங்கள் தீர்மானம் மற்றும் உறுதிமொழி. மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல், அரசுத் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் ஆசிரியர்கள், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் பணியமர்த்துதலை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
மாநிலத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், பத்திரிகையாளர்களுக்காகப் பத்திரிகை மன்றங்களைக் கட்டுவோம் என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்களுக்காக விடுதிகளும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாததற்காக அவர் கடுமையாகச் சாடினார்.
துணை முதல்வராக இருந்தபோது யாதவ் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கருத்துக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர், மகா கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது 17 மாதங்களில் நாங்கள் செய்ததை, கிரிராஜ் சிங் தனது வாழ்நாள் முழுவதும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.