பிகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் சாத் பூஜையை அவமதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பிகாரில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்மரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், முசாபர்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது,
சாத் பூஜை ஒரு "நாடகம்" என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளனர். பிகார் மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். அவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
சாத் பூஜை உலகம் முழுவதும் பிரபலமானது. சாத் பூஜைக்குப் பிறகு பிகாரில் நான் மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த விழா பக்திக்காக மட்டுமல்ல, சமத்துவத்துக்காவும். இந்த விழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற அரசு முயற்சித்து வருகின்றது.
பயணத்தின்போது சாத் பாடல்களை கேட்டு மகிழ்வதாகவும், நாகாலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் பாடிய இந்தப் பாடல்களைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் இந்த விழாவை அவமதிப்பதோடு, அதை ஒரு நாடகம் என்று அழைக்கிறார்கள்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தேர்தல் கூட்டங்களில், பிரதமர் சாத் பூஜையின்போது தில்லி யமுனையில் நீராடத் திட்டமிட்டதன் மூலம் நாடகத்தை நிகழ்த்த முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்குகளுக்காக இவர்கள் எவ்வளவு கீழேவும் குனியத் தயாராகிவிட்டனர். பிகார் பல நூற்றாண்டுகளாக மறக்க முடியாத சாத் பண்டிகைக்கு இது ஒரு அவமானம்.
ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவைதான் பிகாரில் ஆர்ஜேடியின் ஐந்து அடையாளங்கள். ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையேயான உறவு தண்ணீர் எண்ணெய்யைப் போன்றது. அவர்கள் எந்த விலை கொடுத்தாவது பிகாரை கொள்ளையடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் குற்றச் சம்பங்கள் அதிகளவில் நடைபெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.