ஜிஎஸ்டி 
இந்தியா

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக சரிவு

கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியைவிட குறைவாகும்.

இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,86,315 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாயான ரூ.1,74,962 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகம். ஆனால் நிகழாண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கடந்த ஆகஸ்டில் மொத்த உள்நாட்டு வருவாய் ரூ.1.37 லட்சம் கோடியாக 9.6 சதவீதம் அதிகரித்தது. இறக்குமதி மூலம் பெறப்படும் வரி 1.2 சதவீதம் சரிந்து ரூ.49,354 கோடி வசூலானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் ரூ.19,359 கோடியாக 20 சதவீதம் சரிந்தது.

இந்த ஆண்டு ஆகஸ்டில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 10.7 சதவீதம் அதிகம்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT