ஆப்பிள் ஐஃபோன் 17 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துளள்து. அதன்படி, ஆப்பிள் ஐஃபோன் 17 செப். 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த 2025ஆம் ஆண்டு ஆப்பிள் ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ப்ரோ, ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட வரிசைகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
இவற்றுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் என்றும், விற்பனை செப்.19ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஐஃபோன்17 என்ற அடிப்படை மாடல் விலை இந்தியாவில் ரூ.79,990 என்ற அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே, ஐஃபோன் 17 ப்ரோ ரூ.1,24,990 ஆகவும், மிக அதிக வசதிகள் கொண்ட ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியிடப்பட்ட ஐஃபோன்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக அதாவது ரூ.1,64,990 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சற்று மெல்லி டிசைனில் புதிய வடிவத்தில் ஐஃபோன் 17 இருக்கலாம்.
ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ், 12ஜிப் ராம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வரவிருக்கிறது. ஆனால் இந்த ஐஃபோன் அடர் நீலம், வெள்ளை, கருப்பு, ஆரஞ்சு, கிரே நிறங்களில் வரவிருப்பதாக புரளிகளும் வருகின்றன. செவ்வக வடிவிலான கேமரா ஐஃபோனின் மூன்றில் ஒரு பகுதியில் வரலாம் எனவும், ஆப்பிள் லோகோ சற்று கீழே இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவை புரளிகளா உண்மையா என்பதை செப்டம்பர் 9 அன்றுதான் அறிய முடியும்.
ஐஃபோன் 17 மாடல்களில் சிம் கார்டுக்கான ஸ்லாட்டுகள் நீக்கப்படலாம் என்றும், இசிம் முறைக்கு மாறும் வகையில் இது கொண்டுவரப்படவிருப்பதாகவும், அமெரிக்க மாடல் ஐஃபோன்களில் ஏற்கனவே இசிம் முறை கொண்டு வரப்பட்டுவிட்டதர்கவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.