சமூக வலைத்தளங்களில் மக்களுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கு இன்று காலை முதல் ஸ்க்ராலிங் பிரச்னை பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
கணினிகளில், வாட்ஸ்ஆப்பை இணைத்து பயன்படுத்துபவர்கள், சாட் மற்றும் தகவல்களை ஸ்க்ரால் செய்து படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.
முதலில், தங்களுக்கு மட்டுமே ஏதோ பிரச்னை என்று கருதியவர்கள், பிறகுதான், ஒட்டுமொத்த வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கும் இது பிரச்னையாகி இருப்பதை அறிந்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் வெப் செயலியில் ஏற்பட்டிருக்கும் ஒரு பக், பயனர்கள், சாட்களில் மேலும் கீழும் செல்வதைத் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.
எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
மேலும் பலரும், வாட்ஸ்ஆப் மிக மெதுவாக செயல்படுவதாகவும், புகைப்படங்கள் டவுன்லோடு அவதில் சிக்கல் இருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.
ஒரு சிலரோ, எனக்குத்தான் வாட்ஸ்ஆப் வெப் ஸ்க்ரால் ஆகவில்லையா? அனைவருக்கும் நன்றாக செயல்படுகிறதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். சிலர், வாட்ஸ்ஆப் வெப் கனெக்ட் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.