நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள்ளது.
பிகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராவது குறித்து இன்று(செப். 10) இந்திய தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாமில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிகழாண்டு இறுதியில் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நிகழாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. அதில் 7.24 கோடி வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 65 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இதையும் படிக்க: ’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.