சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் இன்று(ஜன. 25) 4,097 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சோ்க்கவும், திருத்தம் தேவைப்படும் வாக்காளர்கள் திருத்தம் செய்து கொள்ளவும், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர்கள் பெயரை சோ்க்கவும் இம்மாதம் 30-ஆம் தேதி வரை அதற்கான படிவங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களில் பெரும்பகுதியினர் தொகுதி மாறிச் சென்றவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வருகின்றன.
இன்று 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 4,097 வாக்குச்சாவடிகளிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் சேர்க்கைக்கான காலக்கெடு ஜன. 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், கடைசியாக நடைபெறும் சிறப்பு முகாம் என்பதால், புதிய வாக்காளர்களாகச் சேருவோரும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தப் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.