கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை! 26 பேர் கைது!

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்களின் மூத்த தலைவர் உள்பட 10 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (செப்.11) ஈடுபட்டனர்.

மெயின்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் உள்பட 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ரூ.1 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த நக்சல் தலைவர் மொடெம் பாலகிருஷ்ணா (எ) பாலண்ணா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கூட்டாக ரூ.13 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் உள்பட 26 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

8 Naxals have been reportedly killed by security forces in Chhattisgarh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிறைகுடியிருப்பு கோயிலில் கும்பாபிஷேகம்

பாரதியாா் நினைவு தினம்; சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

கோவில்பட்டி கல்லூரியில் சகோதரத்துவ தின விழா

நாசரேத் மாதாவனம் ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி

உடல் உறுப்பு தானம் செய்தோா் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செப். 30-இல் திறப்பு

SCROLL FOR NEXT