திரிம்பகேஷ்வரில் 3 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், திரிம்பகேஷ்வரில் கும்பமேளா தொடர்பான துறவிகளின் கூட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக சனிக்கிழமை பத்திரிகையாளர்கள் சிலர் வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களின் வாகனத்தை நிறுத்தி கட்டாய நுழைவுக் கட்டணத்தை செலுத்துமாறு திரிம்பகேஷ்வர் நகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் கேட்டுள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பத்திரிகையாளர்கள் மீது அவர்கள் குச்சி மற்றும் குடைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பத்திரிகையாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் சகன் புஜ்பால் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக திரிம்பகேஷ்வரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.