சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆசாம் கான் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாம் கான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவரின் விடுதலையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆசாம் கான் சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினர் மட்டுமல்ல, சமாஜ்வாதி (சோசலிச) இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இன்று மிகுந்த மகிழ்ச்சியின் தருணம். ஆசாம் கானுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தவுடன், ஆசாம் கான் மீது பதியப்பட்ட அனைத்து "பொய் வழக்குகளும்" திரும்பப் பெறப்படும் என்று முன்னாள் முதல்வர் கூறினார்.
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், முதல்வர் (யோகி ஆதித்யநாத்) மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த பிறகு, அவர் மீதும், துணை முதல்வர் மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றதாக யாதவ் குற்றம் சாட்டினார்.
பாஜக அரசு தனது சொந்தத் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற்றதுபோல, சமாஜ்வாதி கட்சி அரசின் கீழ், ஆசாம் கான் மற்றும் பிறர் மீதான பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
புனையப்பட்ட வழக்குகளால் குறிவைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட நிவாரணம் பெறுவார்கள் என்று யாதவ் கூறினார்.
இதையும் படிக்க: சிறந்த துணை நடிகை: தேசிய விருது பெற்றார் ஊர்வசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.