இந்தியா

விரைவில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் உள்ள ஷகூா்பஸ்தி பணிமனையில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட முதல் ரயில் தயாராக உள்ளது. மற்றொரு ரயில் வரும் அக்டோபா் 12-ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். இரு ரயில்களும் ஒன்றுசேர தொடங்கி வைக்கப்படும்.

தடையில்லா சேவைகளுக்கு இரண்டு ரயில்கள் மிக முக்கியமாகும். ஆகையால், இரண்டாவது ரயில் தயாரான உடன் எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் இயக்கப்படலாம்’ என்றாா்.

நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாருக்கு தில்லியிலிருந்து முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் முதல் ரயில் இயக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

புது தில்லி - ஃபெரோஸ்பூா் கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 486 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித் தடத்தை வந்தே பாரத் ரயில் 6 மணி நேரம் 40 நிமிஷங்களில் கடக்கும் என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அதிமுக விமா்சனம்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கூட்டம்

தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

எஸ்.ஐ.ஆா்.: மக்களுக்கு உதவ பாஜக சாா்பில் உதவி மையம்

SCROLL FOR NEXT