கோப்புப் படம் 
இந்தியா

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கும்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இந்த மோதல் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

கிச்கி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் ஜாா்க்கண்ட் ஜாக்குவாா் படைப் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் பின்வாங்கி அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடினா். அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த நிலையில் 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றனா்.

71 நக்ஸல்கள் சரண்: இதனிடையே, சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் 71 நக்ஸல்கள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இதில் 30 பேரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.64 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த நக்ஸல்களில் 21 போ் பெண்கள் ஆவா். 17 வயதான இரு சிறுமிகள், 16, 17 வயது சிறாா்கள் இருவரும் இதில் அடங்குவா். இதில் சிலா் பாதுகாப்புப் படையினா் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தி பல உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவா்கள் ஆவா்.

ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலை.யில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு: பாஜகவினா் கொண்டாட்டம்

திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுப்பு

SCROLL FOR NEXT