கோப்புப் படம் 
இந்தியா

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது.

தினமணி செய்திச் சேவை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது.

அதில் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் 367 இடங்களும், சிறுபான்மையினா் பிரிவில் 31 இடங்களும் காலியாக உள்ளன.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதலாக சோ்க்கப்பட்ட 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் வரும் அக். 6-ஆம் தேதி மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடத்தப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரித்துச் சிரித்து... ஸ்ருதி சின்ஹா!

எந்தன் கண்கள் உந்தன் மீது... கௌரி ஸ்ருதி!

இஸ்லாமாபாத் கார் வெடி விபத்து: இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

உணரும் தருணம்... விந்தியா கௌட!

தர்மேந்திரா - சர்பிரைஸ் கொடுத்த பாலிவுட்டின் ஹாலிவுட் அழகன்!

SCROLL FOR NEXT