புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்கிறார்.
மாணவிகளிடமிருந்து இது தொடர்பாக புகார் வந்திருப்பதாகவும், இதுவரை 12 முதல் 15 மாணவிகளை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இது தொடர்பாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பிஜிடிஎம் படிப்புகளில் படித்து வந்த மாணவிகளை இவர் துன்புறுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.
இதுவரை 32 மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் 17 பேர், சின்மயானந்த் சரஸ்வதி தங்களிடம் மோசமாக நடந்து கொள்வார், வாட்ஸ்ஆப்களில் மோசமான தகவல்களை அனுப்புவார் என்று குற்றம்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.
மேலும், இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்கும்படி, கல்வி மைய ஊழியர்களும் பேராசிரியர்களும் நிர்பந்தித்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சைதான்யானந்த் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரது இருப்பிடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின்போது, சின்மயானந்த் பயன்படுத்தி வந்த போலியான ஐநா நம்பர் பலகையுடன் கூடிய வால்வோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.
தலைமறைவான சைதான்யானந்த்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.