லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தலைமையில் அங்குள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, லே நகரில் வன்முறை வெடித்ததால் காவல் படைகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மோதல்களில் சுமார் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறைக்கு, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக்கின் தூண்டுதல்தான் காரணம் என நேரடியாகக் குற்றம்சாட்டிய மத்திய உள் துறை அமைச்சகம், நேற்று (செப். 25) அவரது ‘லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்த நிலையில், ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று (செப். 26) மதியம் 2.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, லே வன்முறைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாக சோனம் வாங்சுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.