இந்தியா

கரூர் பலி: காங். தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

விஜய் பிரசாரத்தில் 36 பேர் பலி....

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அதில் மதிப்புக்கரிய பல உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களை இழந்துவாடுவோருடன் என் மனம் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளுடன் கைகோத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூரில் கால்நடை மருத்துவ முகாம்

அந்தியூரில் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

வாய்க்காலில் மூழ்கி தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் பன்னாட்டு திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT