சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்குக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என்று லடாக் காவல்துறை சந்தேகிக்கிறது.
லடாக் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக், தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாங்சுக்குடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான் உளவு அதிகாரியை கைது செய்திருப்பதாக லடாக் காவல்துறை தெரிவித்தது.
செய்தியாளர்களுடன் லடாக் காவல் கண்காணிப்பாளர் சிங் ஜம்வால், ``சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் வங்கதேசத்துக்கும் சென்று வந்தார். எனவே ஒரு பெரிய கேள்விக் குறி வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது நிதியுதவி குறித்தும் விசாரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
யூனியன் பிரதேசமான லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையை நீட்டிக்க வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 4 பேர் பலியானதுடன், சுமார் 90 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, வன்முறைக்குக் காரணமானவர் என்றுகூறி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை கைது செய்தது.
இதையும் படிக்க: 70 வயதில் இப்படிப் பேசலாமா? -பாஜக அமைச்சரை விமர்சிக்கும் காங்.! என்ன நடந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.