ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என முதல்வர் ஒமர் அப்துல்லா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்துக்காக எந்தவொரு அரசியல் சமரசத்தையும் ஏற்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் தயாராக இல்லை. அரசில் பாஜகவையும் சேர்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள எம்எல்ஏ ஒருவரை முதல்வராகப் பதவி உயர்த்தி பாஜகவுடன் அரசு அமைத்துக்கொள்ளுங்கள்” என அவர் பேசியுள்ளார்.
இத்துடன், ஜம்மு - காஷ்மீரின் அரசில் பாஜக இணைந்தால், மத்திய அரசு விரைவாக மாநில அந்தஸ்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.