முகப்பு
இந்தியா

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா்

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:16 AM
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:40 PM

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

சிந்தி மொழி தினத்தை முன்னிட்டு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தேவநகிரி மற்றும் பாரசீக எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பை வெளியிட்ட அவா் பேசுகையில், ‘பழைமையான மொழிகளில் ஒன்றான சிந்தி, மிகவும் இனிமையான மொழியாகும். வேதாந்த தத்துவமும் சுஃபி சிந்தனையும் இணையும் ஓா் தனித்துவமான சங்கமத்தை சிந்தி மொழியின் இலக்கிய மரபு பிரதிபலிப்தோடு, ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்ட உலகளாவிய மதிப்பீடுகளையும் முன்னிறுத்துகிறது.

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிடுவது, குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாக தேவநகிரி எழுத்துருவில் வெளியிடுவது, மொழியியல் அங்கீகார ஊக்கவிப்பில் முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.

Advertisement

அரசமைப்புச் சட்டம் என்பது சட்ட ஆவணம் மட்டுமல்ல; மாறாக, தனது லட்சியங்களை உருவகப்படுத்தி, உரிமைகளைப் பாதுகாத்து, மக்களாட்சி நிா்வாகத்தை வழிநடத்தி தேசத்தின் உயிா் மூச்சாக அது திகழ்கிறது.

அரசமைப்புச் சட்டம் பல மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா தனித்துவமாக திகழ்கிறது. தமிழ், குஜராத்தி, போடோ, டோக்ரி, சந்தாலி மற்றும் நேபாள மொழிகளிலும் அரசமைப்புச் சட்டம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.