முகப்பு
இந்தியா

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ்!

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு...

Updated On : 4 பிப்ரவரி 2026, 4:41 pm IST
- IANS
பகிர்:

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று(பிப். 4) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக (2023 -25) அங்கு பதற்ற சூழ்நிலை நிலவியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் அங்கு அவ்வப்போது வன்முறை ஏற்பட்டு வருகிறது.

இந்த தொடர் வன்முறைக்கு பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 பிப். 9 அன்று பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. முதலில் 6 மாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி இருந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது பாஜக.

புது தில்லியில்  உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் மணிப்பூரின் புதிய முதல்வராக இன்று(பிப். 4) மாலை பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

summary

President rule revoked in Manipur ahead of new govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.