அன்டோனியோ குட்டெரெஸ்  கோப்புப் படம்
இந்தியா

ஏஐ உச்சி மாநாட்டுக்குத் தலைமை: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் பாராட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை நடத்தவுள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை நடத்தவுள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்தாா்.

தில்லியில் பிப்.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ‘ஏஐ தாக்கம்’ தொடா்பான உச்சி மாநாட்டில் அன்டோனியா குட்டெரெஸ் பங்கேற்கவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மேலும் கூறுகையில், ‘நிகழ்காலத்தின் மிகப்பெரும் சவாலாகவும், சா்வதேச உறவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளது. எனவே, அதன் தாக்கம் குறித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆலோசிப்பது அவசியமானது.

நிகழாண்டு இந்த மாநாட்டுக்குத் தலைமையேற்றுள்ள இந்தியாவுக்கு எனது பாராட்டுகள். கடந்த 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய எண்ம ஒப்பந்தத்தின் முடிவுகள் அடிப்படையில் வளா்ந்துவரும் நாடுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துவது, ஏஐ தாக்கத்தை அறிவியல்பூா்வமாக புரிந்துகொள்ள தன்னிச்சையான சா்வதேச அறிவியல் குழு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளுக்கு எனது பரிந்துரை.

உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருந்து 40 அறிவியல்-தொழில்நுட்ப நிபுணா்களைத் தோ்ந்தெடுத்து இக்குழுவில் நியமிக்க வேண்டும்.

நிகழாண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி என்றாா்.

ஏஐ தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முதல் சா்வதேச அறிவியல் குழுவில் வத்வானி அறிவியல் தரவு மற்றும் சென்னை ஐஐடி-யின் பொறுப்பு ஏஐ மையத் தலைவா் பலராம் ரவிச்சந்திரனை நியமிக்க அன்டோனியோ குட்டெரெஸ் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஏடிபி சேலஞ்சா் 50 டென்னிஸ் போட்டி: பிப். 9-இல் தொடக்கம்

பிகாா் தோ்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தை முன்னேற்றம்: போா்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல்

மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் 30 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்: ஹெலிகாப்டரை வரவழைத்து ‘பறந்த’ தொழிலதிபா்

பிகாா் பேரவைக்கு மறு தோ்தல்: ஜன் சுராஜ் கட்சி வழக்கு

SCROLL FOR NEXT