முகப்பு
இந்தியா

சரத் பவாரின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை!

சரத் பவாரின் உடல்நிலை பற்றி..

Updated On : 11 பிப்ரவரி 2026, 1:47 pm IST
சரத் பவார்(கோப்புப்படம்)
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், அடுத்து இரண்டு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

85 வயதான மாநிலங்களவை உறுப்பினர் சரத் பவார் மூச்சுத் திணறல் மற்றும் தொடர்ச்சியான இருமல் காரணமாக புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் ரூபி ஹால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதுதொடர்பாக ரூபி ஹால் மருத்துவமனையின் மருத்துவரும் அறங்காவலருமான டாக்டர் சைமன் கிராண்ட் கூறுகையில்,

Advertisement

Advertisement

சரத் பவாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேறி வருவதாகவும், அவரது சுவாசம் தற்போது சீராக உள்ளது. அவருக்கு ஏற்பட்ட மார்புச் சளி, தொடர் இருமலுக்குத் தொடர் சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது. 

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. தொடர் அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாகவும் குறிப்பாக அவரது பயணம்  மற்றும் அடிக்கடி பொது தொடர்புகள் காரணமாக  இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தொடர்ந்து முன்னேறி வருவதால் அடுத்த இரண்டு நாள்களில் அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் குழுத் திட்டமிட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

summary

NCP (SP) president Sharad Pawar, admitted to a private hospital here following a chest infection, is stable and likely to be discharged in the next two days, doctors treating him said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.