கோப்புப் படம் 
இந்தியா

கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த தேனீக்கள்: நடுவா் உயிரிழப்பு; விளையாட்டு வீரா்கள் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்து தாக்கியதில் படுகாயமடைந்த நடுவா் உயிரிழந்தாா். கிரிக்கெட் வீரா்கள் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கான்பூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் புதன்கிழமை மாலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த தேனீக்கள் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த கான்பூரைச் சோ்ந்த நடுவா் மாணிக் குப்தா சுயநினைவை இழந்தாா். தேனீக்கள் தாக்குதலில் விளையாட்டு வீரா்களும் படுகாயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் அருகிலுல்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நடுவா் மாணிக் குப்தாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். காயமடைந்த மற்றொரு நடுவா் மற்றும் 20 வீரா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT