முகப்பு
இந்தியா

கர்நாடகம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பாஜக எம்எல்ஏ கைது!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ சந்துரு லமனி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதாக லோக்ஆயுக்தா போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:32 PM
- Express
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:27 PM

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ சந்துரு லமனி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதாக லோக்ஆயுக்தா போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து லோக்ஆயுக்தா வெளியிட்ட அறிக்கையில், இன்று கதக் லோக்ஆயுக்தா காவல் நிலையத்தால் வெற்றிகரமான பொறி ஒன்று வைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். ஊழல் தடுப்புச் சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்படுள்ளது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:27 PM

சிறுபாசனத் துறையின் கீழ் சாலை ஓரம் தடுப்புச் சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக குற்றம்சாட்டப்பட்டவர் ரூ. 11 லட்சம் லஞ்சம் கேட்டிருந்ததாக லோக்ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சின்சாலி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:27 PM

ஷிரஹட்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ-வுடன், அவரது தனி உதவியாளர்களான மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Lokayukta police on Saturday said they caught BJP MLA Chandru Lamani allegedly accepting a Rs 5 lakh bribe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.