தாய் ரோஹிணி, சமரேஷ் சிங் உடன் ஆதித்யா  படம் - எக்ஸ்
இந்தியா

சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் லாலு பிரசாத் யாதவின் பேரன்!

லாலுபிரசாத் யாதவின் பேரன் சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

லாலு பிரசாத் யாதவின் பேரன் சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் சேர்ந்துள்ளார். இதன் புகைப்படத்தை லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதிக்கு பிறந்த 9 பேரில், இரண்டாவது மகள் ரோஹிணி ஆச்சார்யா. இவருக்கும் சமரேஷ் சிங் என்பவருக்கும் பிறந்தவர் ஆதித்யா.

தற்போது 18 வயதை பூர்த்தி செய்துள்ள ஆதித்யா, சிங்கப்பூர் ராணுவத்தில் அடிப்படை பயிற்சி பெறவுள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஆண் குடிமக்கள் அனைவரும் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு கட்டாயம் ராணுவப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். சிங்கப்பூரில் இரண்டாம் தலைமுறை குடியிருப்பாளர்களாக உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். அந்தவகையில் ஆதித்யா சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் இணையவுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரோஹிணி ஆச்சார்யா பகிர்ந்துள்ளதாவது,

''எனது நெஞ்சம் இன்று பெருமையடைந்துள்ளது. பல்கலைக் கழகத்திற்கு முந்தைய படிப்புகளை முடித்து எங்கள் மூத்த மகன் ஆதித்யா இரண்டு ஆண்டுகள் அடிப்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

ஆதித்யா, நீ தைரியமானவன். ஒழுக்கமானவன். சென்று அற்புதங்களைச் செய்து திரும்புவாயாக. வாழ்வின் கடினமான போர்களில் வீரர்கள் உருவாகிறார்கள் என்பதை மட்டும் நினைவுகொள். எங்களின் அன்பும் ஊக்கமும் என்றும் உன்னுடன் இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Lalu Yadav's Grandson Has Begun Military Training In Singapore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல்: தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணமூல் எம்பிக்கள் போராட்டம்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க உத்தரவு!

ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்!

இபிஎஸ் - நயினார் ஆலோசனை! 56 தொகுதிகள் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT