பெங்களூரில் தலைமையகம் கொண்டு செயல்பட்டுவரும் மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், செயற்கை நுண்ணறிவு (ஜெனரேட்டிவ் ஏஐ) மயமாக்கலை விரைவுபடுத்த அமேஸான் வெப் சா்வீசஸுடன் (ஏடபிள்யுஎஸ்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் கவனம் செலுத்தி, துறை வளா்ச்சியை விரைவுபடுத்த பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் ஏஐ மயமாக்கலை விரிவுபடுத்த ஏடபிள்யுஎஸ்-உடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் மற்றும் ஏடபிள்யுஎஸ் இடையிலான இந்தக் கூட்டணி, நிறுவனத்தின் உள்நாட்டு செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், உற்பத்தி, தொலைத் தொடா்பு, நிதிச் சேவைகள், நுகா்வோா் பொருள்கள் ஆகிய துறைகளில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு உயா் ரக சேவையை அளிக்கும் நோக்கம் கொண்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.