ஜம்முவில் பாகிஸ்தான் எல்லை அருகே பிடிபட்ட புறாவால் பரபரப்பு நிலவியது.
ஜம்முவின் அக்னூர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோடு அருகே கிராமத்தில், சந்தேகத்திற்கிடமான புறா பிடிபட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
சாம்பல் நிறத்தில் இருந்த புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்பு பட்டைகளும் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வளையங்களும் இருந்தன.
மேலும் புறாவில் 'ரெஹ்மத் சர்க்கார்' மற்றும் 'ரிஸ்வான் 2025' எனும் எழுத்துகளோடு, சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புறாவை கரஹ் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆர்யன் இன்று காலை பிடித்ததாகவும், புறாவின் இறக்கைகளில் முத்திரைகள் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
விசாரணைக்காக அந்தப் புறா பல்லன்வாலா காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.