வடக்கு மும்பையில் பாஜக - சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) கூட்டணி வெற்றி பெற 90% வாய்ப்பிருப்பதாக மத்திய உணவு, பொதுவிநியோகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சிக்கு ஜனவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மறுநாளான 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தல் தொடர்பாக அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியால் மும்பை மக்கள் நிறைவடைந்துள்ளனர். இரட்டை என்ஜின் அரசு போன்று மூன்று என்ஜின் அரசை மும்பை மக்கள் விரும்புகின்றனர்.
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி பெரும்பான்மை வெற்றியைப் பெறும். சர்வதேச நகரமாக மும்பை விரைவில் மாறும். அதனைநோக்கிய பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
வடக்கு மும்பையில் 90% வெற்றி வாய்ப்பு பாஜக - சிவசேனை கூட்டணிக்கு உள்ளது என்பது என்னுடைய நம்பிக்கை. இதன்மூலம் 42 இடங்களில் வெற்றி உறுதியாகியுள்ளது.
மும்பையின் ஒவ்வொரு மக்களுக்கும் வளர்ச்சியும் மேம்பாடும் கிடைக்க வேண்டும் என்பதே நரேந்திர மோடி மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் நோக்கமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.