குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (74) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஜன. 12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயம் சார்ந்த பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலன் சார்ந்த பிரச்னை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டுமென்பதால், குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2025 ஜூலை மாதம் தன்கர் அறிவித்தார். அவரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, உடல் அசெளகரியம் மற்றும் மார்பு வலி காரணமாக கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்கர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 12 ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் சார்ந்த பிரச்னைக்காக ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.