திருமணம் நடக்கவிருந்த நாளிலேயே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் பலியான நிகழவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், ஸ்ரீகர்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 28 வயது இளைஞரின் இருசக்கர வாகனம் அரசு மின்சாரப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் பலியான இளைஞர் செம்பாழந்தி செல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு கத்தைக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திங்கள்கிழமை காலை கோயிலில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஸ்ரீகர்யம் போலீஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணை முடிந்ததும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் மேலும் கூறினர். ஆனால் இருவரின் வீட்டிலும் இவர்களின் திருமண முடிவை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கோயிலில் முதலில் திருமணத்தை நடத்தி பின்னர் அதனை பதிவு செய்ய அவர்கள் முடிவு செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்கள் சந்தவிலாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். ராகேஷ், உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என்று போலீஸார் கூறினர். இருசக்கர வாகனம் முற்றிலுமாக சேதமடைந்தது. உடற்கூராய்வுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.