தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும் :
தெரு நாய்களால் நாய்க்கடி புகார்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தெரு நாய்களுக்கு உணவு, தங்குமிடம் உள்பட ஆதரவான போக்கைக் கடைப்பிடிக்கும் நபர்கள் மீதே நடவடிக்கை பாயும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன. 13) தெரிவித்துள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் விவகாரத்தில் பல்வேறு தரப்பும் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிம்ன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என். வி. அஞ்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
‘ஒவ்வொரு நாய்க்கடிக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும். அவர்களே இதற்கான முக்கிய காரணம். கடந்த ஐந்தாண்டுகளில் கட்டுப்பாட்டு நடவடைக்கைகளை முறையாக எடுக்காததே இதற்கு காரணம்.
அவர்கள் மட்டுமில்லாது, தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
உங்களுக்கு அந்த மிருகங்களைப் பிடித்திருந்தால் உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பராமரியுங்கள்’ என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.