கடந்த ஆண்டில் மட்டும் மூச்சு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு 9, 211 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8,801 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தில்லி அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, சுவாச சுழற்சி அமைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிகபட்சமாக 21,262 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்டு 16,060 பேர் இறந்துள்ளனர். மனநிலை மற்றும் நடத்தை கோளாறு காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இறப்பி விகிதம் தலைநகரில் அதிகரித்துள்ளது. இதேபோன்று, மூச்சு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இறப்பதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதை தரவுகள் குறிப்பிடுகின்றன.
2024-ல் மட்டும் தில்லியில் இறந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சம். இதில் 85,391 ஆண்கள், 54,051 பேர் பெண்கள், 38 பேர் பிற பாலினத்தவர்கள். அதாவது தில்லியில் கடந்த ஆண்டு கணக்கின்படி, தில்லியில் ஒரு நாளுக்கு 381 பேர் இறந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.