பாலக்காடு: கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியில், வயதான மூத்த தம்பதி குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது 3 வயது பேரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், மூத்த தம்பதியின் மருமகனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்டவர்கள், நசீர் (78), சுஹாரா (70) என்பதும், ஒட்டப்பாலம் பகுதியில் தோட்டகராவில் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களது பேரன் முகமது இஷான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொலையை செய்தது பொன்னனியைச் சேர்ந்த முகமது ரஃபி என்பதும், இவர் தம்பதியின் மருமகன், குழந்தையின் தந்தை என்பதும் தெரிய வந்துள்ளது.
தம்பதியின் மகள் சுல்ஃபி, கணவர் ரஃபியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில மாதங்களாக பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு, நசீர் வீட்டுக்கு வந்த ரஃபி, தம்பதியைக் குத்திவிட்டுக் குழந்தையையும் குத்தியிருக்கிறார். உடனடியாக குழந்தையை சுல்ஃபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, வயதான தம்பதி இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
குழந்தைக்கு மிக ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலைமை சீராக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலையாளியை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.