தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஒவைசி கூறியிருப்பதாவது "ஹைதராபாதை சேர்ந்த மூவர் உள்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை தருவதாக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் வேலை எனக்கூறி, மியான்மர் - தாய்லாந்து எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் 18 முதல் 20 மணிநேரம் வேலைசெய்ய நிர்படுத்தப்படுவதுடன், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். மேலும் பாஸ்போர்ட், தொலைபேசி, மருத்துவ வசதிகளை இழந்துள்ளனர்.
மியான்மர் - தாய்லாந்து எல்லையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கப்படுவதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.