பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) பஞ்சாப் மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
குரு ரவிதாஸ் ஜியின் 649-ஆவது பிறந்தநாளையொட்டி, தேரா பல்லனுக்கு பிரதமர் மோடி வருகைதரும் நிலையில், தேரா சச்கந்த் பல்லன் மற்றும் ஜலந்தர் பகுதிகளில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளியில் மாணவர்களுக்கு இன்று விடுமுறைதான்.
இரு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து போலீஸார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.