முகப்பு
இந்தியா

மாதம் ரூ.2500க்கு கூப்பன்; 2 சிலிண்டர் இலவசம்: கேரள பாஜக தேர்தல் வாக்குறுதி!

கேரளத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2500க்கு கூப்பன், ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் உள்ளிட்டவை பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளன.

Updated On : 31 மார்ச், 2026 at 10:58 AM
நிதின் நபின் - ANI
பகிர்:

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.2500 கூப்பன், ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கேரள மாநிலத்தில் பாஜக வெளியிட்டிருக்கிறது.

கேரள மாநிலத்துக்கு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இரண்டு சிலிண்டர்களும் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தேவை இருக்கும் பெண்கள், விதவைகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

கேரளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் பக்சய ஆரோக்கிய சுரக்சா திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மாதந்தோறும் ரூ.2,500க்கு ரீசார்ஜ் செய்யப்படும். அதன் மூலம் பெண்கள் மருந்துகள், மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்.

கேரளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

திருவனந்தபுரம் - கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.