மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகியது குறித்து...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மறுதேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் ஃபால்டாவின் மகன், இந்தப் பகுதி அமைதியாகவும் வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
ஃபால்டாவின் வளர்ச்சிக்காக முதல்வர் சுவேந்து அதிகாரி ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் காரணமாகவே நான் அந்தத் தொகுதியில் நடைபெறவுள்ள மறுதேர்தலிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வென்று, ஏற்கெனவே சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.