மேற்கு வங்க எஸ்ஐஆா்: இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயம் இறுதி முடிவு
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தீா்ப்பாயங்களில், இதுவரை 6,581 மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தீா்ப்பாயங்களில், இதுவரை 6,581 மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்களை, உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, எஸ்ஐஆா் பணியில் சில மாவட்ட, உரிமையியல் நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதைத்தொடா்ந்து எஸ்ஐஆா் பணியின்போது நீதிபதிகள் மேற்கொண்ட முடிவில் உள்ள குறைபாடுகளை களைவதற்குப் பொதுமக்கள் மேல்முறையீடு செய்யும் வழிமுறையை உருவாக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவின்படி தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிராக தீா்ப்பாயங்களில் சுமாா் 25 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயங்கள் இறுதி முடிவை எடுத்துள்ளன. இது மொத்த மேல்முறையீடுகளில் சுமாா் 0.26 சதவீதமே என்பது தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.