பழனி அருகே கார்-வேன் மோதல் 3பேர் சாவு 7 பேர் காயம்
திண்டுக்கல், டிச. 14: பழனி அருகே கார்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் பழனி அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 3 பேர் மரணமடைந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் அறுவ
திண்டுக்கல், டிச. 14: பழனி அருகே கார்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் பழனி அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 3 பேர் மரணமடைந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருபவர் நீதிமணி. புதன்கிழமை காலை மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் இப்ராகிம் (55) ஓட்டிச் சென்றார். பழனி அருகே கணக்கன்பட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே சிதம்பரத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் வேனுடன் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் நீதிமணி, இப்ராகிம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வேனில் வந்த கோபாலகிருஷ்ணன்(50) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வேனில் வந்த கடலூர் மாவட்டம் கீழபருத்திக்குடியைச் சேர்ந்த சிவக்குமார், காளிராஜன், ரஜனிகாந்த், நரேந்திரன், குமார், அருள்முருகன், சம்பத்குமார் ஆகிய 7 பேர் காயமடைந்தனர்
Advertisement