பண்ருட்டி தனியார் கற்பூர குடோனில் தீ
பண்ருட்டி, நவ.5: பண்ருட்டியில் தனியார் கற்பூர குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள தனியார் கற்பூர கம்பெனியில் இன்று காலை தீ பற்றியது. கம்பெனியின் பின்புறமே குடோன் இருப்பதால்,
பண்ருட்டி, நவ.5: பண்ருட்டியில் தனியார் கற்பூர குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள தனியார் கற்பூர கம்பெனியில் இன்று காலை தீ பற்றியது. கம்பெனியின் பின்புறமே குடோன் இருப்பதால், தீ மளமளவென பற்றியது. குடோனில் இருந்த ஊழியர் இரும்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்துத் தப்பினார். கற்பூரம் எரிந்து கரும்புகை அந்த இடம் முழுவதும் சூழ்ந்துள்ளது. பரபரப்பான சாலையின் மையப் பகுதி என்பதால் நிறையப் பேருக்கு கண் எரிச்சல் உண்டானது.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.