நடத்தையில் சந்தேகம் : மருத்துவமனையிலேயே நர்ஸை வெட்டிய கணவர்
சிதம்பரம், ஆக., 24 : கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் மீனாட்சி (32). இவரது கணவர் சந்திரசேகரன் (36), வெளிநாடு சென
சிதம்பரம், ஆக., 24 : கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் மீனாட்சி (32). இவரது கணவர் சந்திரசேகரன் (36), வெளிநாடு சென்று பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய சந்திரசேகரனுக்கு, மீனாட்சியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த மீனாட்சியை, சந்திரசேகரன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மீனாட்சி கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியைக் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Advertisement