விருதுநகர் : வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம்
விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 AM
விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
விருதநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்குச் செல்லும் சாலையில் பட்டாசு ஆலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்றது. பாலவனத்தை அடுத்துள்ள பாலம் அருகே திடீரென இந்த வேன் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.