சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் : 1500 பேர் கைது
சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
தற்போதைய செய்திகள்சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் : 1500 பேர் கைது
சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கக் கூடிய மதுக்கடையில், இன்று காலை பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில், பாமக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இரா. அருள் முன்னிலையில் பெண்கள் உட்பட ஏராளமான பாமகவினர், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய சேலம் மாநகர உதவி காவல்துறை ஆணையர் ரவிசங்கர் தலைமையிலான போலிஸார் 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
இதேப்போல, சேலம் நகரத்தில் 30 இடங்களில் நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டத்தில், 100 பெண்கள் உட்பட 483 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சேலம் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் 30 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் கைதானார்கள்.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் பெண்களும் அடங்குவர்.