பண்ருட்டியில் தானே புயல் பாதிப்பு வீடுகளுக்கு வந்த கம்பிகள் திருட்டு
பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தானே புயலில் பாதித்த வீடுகளை கட்ட வந்த கம்பி முறைகேடாக லாரியில் கடத்தப்பட்டது.
பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தானே புயலில் பாதித்த வீடுகளை கட்ட வந்த கம்பி முறைகேடாக லாரியில் கடத்தப்பட்டது.
ஆண்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை தானே புயல் தாக்கியது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்ட அரசு அனைத்துப் பொருட்களையும் வழங்கி வருகிறது. அதன்படி, வட்டார அலுவலகம் மூலமாக பயனாளிகளுக்கு அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று இரண்டு லாரிகளில் வந்த கம்பிகளில் 10க்கும் மேற்பட்ட கட்டுக்களை இறக்காமலேயே லாரி ஓட்டுநர்கள் எடுத்துக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.